பல் இம்பிளான்ட் சிகிச்சை என்றால் என்ன?
பல் இம்பிளான்ட் சிகிச்சை என்பது பல் மருத்துவ துறையில் ஒரு புரட்சியைத் தூண்டியுள்ளது. இந்த சிகிச்சை முறையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி பல மாறுபட்ட மற்றும் எளிமையாக்கப்பட்ட சிகிச்சை முறைகளை சென்னையில் உள்ள பல பல் மருத்துவ சிகிச்சை மையங்கள் வழங்குகின்றன. பல் இம்பிளான்ட் என்பது டைட்டானியத்தால் செய்யப்பட்ட பல்லை, பல் இல்லாத இடத்தில் புகுத்துவது ஆகும். அவை தாடை எலும்பில் பொறுத்தி வைக்கப்பட்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்களை மீட்டெடுக்க உதவுகின்றன. பற்களை மிகவும் திறம்பட தக்கவைத்துக் கொள்ளவும் இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகின்றன. இந்த பல் இம்பிளான்ட் முறையில் பற்கள் சீரமைப்பதால் ஒரு நோயாளியின் ஆரோக்கியம் அதிகளவில் மேம்படுத்தப் படுகிறது. இதனால் இழந்த பற்களுக்கு பதிலாக, அதே இயற்கை பல்லை போன்ற அமைப்பு கொண்ட மாற்று பல்லை பெற முடிகிறது.
பல் இம்பிளான்ட் சிகிச்சை செய்து கொள்வதன் நன்மைகள் என்ன?
1. வாயில் ஒன்று அல்லது பல காணாமல் போன பற்களால் ஏற்பட்ட வெற்றிடம் இருக்கும் சூழ்நிலையில் , அந்த வெற்று இடத்தை பல் இம்பிளான்ட் சிகிச்சை மாற்றி அமைக்கிறது.
2. பல் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் மாற்றம் செய்யப்பட்ட பற்கள் இயற்கையான பற்களைப் போலவே இருக்கும். அவை செயற்கையாகத் தெரியாது. பல் இம்பிளான்ட் மூலம் பெறும் பற்களின் தோற்றத்தில் நோயாளிகள் மிக உயர்ந்த அளவிலான திருப்தியைப் பெற்றுள்ளதாக பதிவு செய்திருக்கிறார்கள்.
3. பல் இம்பிளான்ட் செய்யப்பட்ட பல்லை, பல் செட் போல இரவில் அகற்றப்பட வேண்டியது இருக்காது.
இதனால் ஒரு இயற்கையாக தோற்றத்தை நோயாளிகள் உணர்கிறார்கள்.
4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்களை மாற்றுவதற்காக பல் இம்பிளான்ட் செய்து கொண்ட நோயாளிகள் நிறைவான திருப்தியைப் பதிவு செய்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. இந்த இம்பிளான்ட் சிகிச்சை செய்து கொள்வதன் எலும்பு இழப்பைக் குறைக்து கொள்ளலாம். தாடையில் ஒரு பல் காணாமல் போகும்போது, காணாமல் போன பல்லைச் சுற்றியுள்ள எலும்பின் செயல்பாட்டில் குறைகள் உண்டாகலாம். இதனால் தாடை சுருங்கத் தொடங்குகிறது. பல் இம்பிளான்ட் செய்வதன் மூலம் எலும்பின் இழப்பை வெகுவாகக் குறைக்க முடியும்.
6. மேலும் கழற்றி, மாட்டக்கூடிய பற்களை விட இம்பிளான்ட் செய்யப்பட்ட பற்கள் மிகவும் வசதியானதாக இருக்கும்.
அவை உணவை மெல்லுவதற்கு இயற்கையான பற்களைப் போலவே திறமையாக செயல்படும்.
7. வழக்கமான பல் துலக்குதல் மற்றும் வாய் கொப்பளித்து செயல்பாடுகளை சாதாரண பற்களைப் போலவே பராமரிக்கலாம்
8. பல் இம்பிளான்ட் டைட்டானியம் மற்றும் பிற உலோகக் கலவைகளால் செய்யப்படுகின்றன. இவை தினசரி மெல்லும் சக்தியைத் தாங்கும் அளவுக்கு அவை மிகவும் வலுவாக தயாரிக்கப்படுகின்றன.
பல் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் உங்கள் முன் பற்களை மாற்ற முடியுமா? என்ற கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது.
ஆம், உங்கள் முன் பற்களை பல் இம்பிளான்ட் சிகிச்சை மூலம், நிலையான பாலங்கள் அல்லது நீக்கக்கூடிய பற்களால் மாற்றி அமைத்து கொள்ளலாம்.
சென்னையில் இந்த பல் இம்பிளான்ட் சிகிச்சையை மேற்கொள்ள பல சிகிச்சை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சிகிச்சை மையத்தின் நவீன தொழில்நுட்பத்தை பொறுத்தும், நோயாளியின் பற்களின் பாதிப்பை பொறுத்தும் இதற்கு ஆகக் கூடிய செலவுகளில் மாற்றம் ஏற்படலாம்.
பல் இம்பிளான்ட் சிகிச்சை முறைக்கு ஆகும் செலவுகளில் பரவலான மாறுபாடு உள்ளது. ஏனெனில் இது இம்பிளான்ட் செய்வதற்கு தேவையான முத்திரை, எலும்பின் அளவு மற்றும் எலும்பு ஒட்டுதலின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே செய்யப்படுகிறது. பல் இம்பிளாண்ட் செய்யப்பட வேண்டிய இடத்தில் உள்ள எலும்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், முதலில் அதனை சரி செய்ய தனி சிகிச்சை அளிக்கப்படும். அதுபோல பல் ஈறுகளில் ஏதேனும் பாதிப்புக்கள் இருந்தால், அதற்கு தனி சிகிச்சை அளிக்கப்படும். எனவே பல் இம்பிளாண்ட் சிகிச்சை அளிக்கப் படுவதற்கு முன்பு ஒரு விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். அந்த பரிசோதனையின் முடிவை பொறுத்தே சிகிச்சை முறைகள் நிர்ணயிக்கப்படும்.
அதன் அடிப்படையில் தான் பல் இம்பிளாண்ட் சிகிச்சைக்கு ஆகும் செலவு நிர்ணயம் செய்யப்படும். இந்தியாவில் பல் இம்பிளாண்ட் செய்ய ஆகும் செலவு, உலகளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது 4 முதல் 5 மடங்கு வரை குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக, க்ரெளன் உட்பட ஒரு பல் இம்பிளாண்ட் சிகிச்சை செய்ய பொதுவாக 500 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் (சுமார் ரூ .35,000 – ரூ .65,000). பல் இம்பிளாண்ட் சிகிச்சையின் செலவுகளை குறைக்க, அதற்கென நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களான க்ரெளன், மற்றும் இம்பிளாண்ட் பிராண்டுகளில் வெவ்வேறு விருப்பங்கள் உள்ளன. உங்கள் உள்வைப்பு அறுவை சிகிச்சையைத் திட்டமிடுவதற்கு முன்பு ஒரு முழுமையான செலவு அறிக்கை உங்களுக்கு சிகிச்சை மையத்தால் வழங்கப்படும். அதனை அடிப்படையாக கொண்டு நீங்கள் உங்கள் பல் இம்பிளாண்ட் சிகிச்சையை நியாயமான செலவுகளில் மேற்கொள்ளலாம். சென்னையில் இந்த சிகிச்சை முறைகளை வழங்கிட பல்வேறு பல் மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்ளன.
மேலும் வாசிக்க : பல் இம்பிளான்ட் சிகிச்சை முறை.