பல வகை வாய்ப்புகளுக்கு மத்தியில் ஒரு தலைசிறந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. நமக்கு அறுவை சிகிச்சை செய்யும் முதுகெலும்பு நிபுணர் யார் என்பதை நாம் சரியாக தேர்ந்தெடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் அறுவை சிகிச்சை நிபுணர் உடன் நாம் நேரில் பேசி கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவது ஒரு சிறந்த வழியாகும். ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் நம்பகத்தன்மையை சரிபார்க்க பல வழிகள் உள்ளன. எனவே நம்பகத்தன்மையை சரிபார்ப்பது என்பது ஒரு பிரச்சினை அல்ல. இதற்குப் பின்பும் நமக்கு மருத்துவரின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் இரண்டாவதாக மற்றொரு மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்.
மருத்துவருடன் பேசி கலந்தாலோசித்தல்.
ஒவ்வொரு நோயாளிக்கும், அறுவை சிகிச்சை முறை குறித்தும், அறுவை சிகிச்சை நிபுணர்களை குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளதாக இந்தியாவின் தலைசிறந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் (Spine surgeon in India) குறிப்பிடுகிறார். இந்த சந்தேகங்களை நோயாளிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு மருத்துவரின் கடமை ஆகும். நோயாளிகள் தங்கள் மருத்துவரை நேரில் சந்தித்து, தங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி கலந்து ஆலோசிப்பது சிறந்தது. அறுவை சிகிச்சை மேற்கொண்டால், ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், நன்மைகள் பற்றியும், ஒருவேளை சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றியும் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற முந்தைய நோயாளிகளிடம், அவர்களின் அனுபவத்தை கேட்டு அறிந்து கொள்வதும் சிறப்பாக இருக்கும்.
நம்பகத்தன்மை சோதனை
இந்தியாவின் தலைசிறந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் கூட, ஒரு நோயாளி அவரிடம் நம்பகத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பும் போது புருவங்களை உயர்த்துவார். மருத்துவரிடம் உள்ள சான்றிதழ்கள், விருதுகள், மற்றும் பதிவுகள் ஆகியவை மட்டுமே அவருடைய நம்பகத்தன்மையை தீர்மானிப்பதில்லை. எனவே நாம் அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட முந்தைய நோயாளிகளை சந்தித்து, மருத்துவர் அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள் பற்றியும், மருத்துவரின் அணுகு முறை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். தண்டுவடம் சம்பந்தப்பட்ட மருத்துவ வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களை நாம் தேர்ந்தெடுப்பது நல்லது, ஏனென்றால் அவர்களுக்கு முதுகெலும்பு சிகிச்சை சம்பந்தப்பட்ட நவீன வழி முறைகளும், நவீன மருந்துகள் பற்றியும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்.
இரண்டாவது கருத்து
நாம் தேர்வு செய்த அறுவை சிகிச்சை நிபுணர் நமது எதிர்பார்ப்புகளையும் நமது தேவைகளையும் நமது சந்தேகங்களையும் பூர்த்தி செய்யவில்லை எனில் இரண்டாவதாக மற்றொரு மருத்துவரை தேர்ந்தெடுத்து கலந்தாலோசிப்பது நல்லது. நாம் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கும் மருத்துவரிடமும் இதேபோல அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, அவருடைய நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம். இந்த இரண்டு மருத்துவர்களை தாண்டி, மூன்றாவதாக ஒரு மருத்துவரையும் ஆலோசனையில் வைத்துக்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்வது தவறு ஒன்றும் இல்லை.
மேலும் வாசிக்க : ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்.