பற்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் வகைகள்.
ஒரு மனிதனுக்கு பற்கள் என்பது மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். மனிதனுடைய உடல் முறையான வளர்ச்சி பெறுவதற்கு அவன் உண்ணக்கூடிய உணவு இன்றியமையாதது ஆகும். அந்த உணவுகளை நன்றாக மென்று உண்பதற்கு பற்கள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. இது தவிர சரளமாக மற்றும் தெளிவாக பேசுவதற்கும், அழகான வெளித்தோற்றத்தை முகத்தில் புன்னகை மூலம் காட்டுவதிலும் பற்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக தகுந்த வயது வந்த மனிதன் சராசரியாக 28 முதல் 32 பற்களை பெற்றிருப்பான் என்றாலும் எல்லா பற்களும் ஒரே அமைப்பில் இருப்பது இல்லை. சிலருக்கு கூடுதலாக சில பற்கள், அல்லது குறைவான சில பற்கள் இருக்கலாம்.
பற்களின் வகைகள்:
1. இன்சிசோர்
2. கனின்ஸ்
3. ப்ரீ மோலார்
4. மோலார்
இன்சிசோர் : இதற்கு வெட்டுப்பற்கள் என்று பெயர். இது மனிதனுடைய வாயின் முன்பகுதியில் மேலே நான்கு பற்கள், கீழே நான்கு பற்கள் என மொத்தம் 8 பற்களாக அமையப்பெற்றுள்ளன. ஒரு மனிதன் சிரிக்கும்போது இந்த நான்கு பற்கள்தான் அவனுடைய புன்னகையை அழகாக வெளிப்படுத்தும். மேலும் இந்த வெட்டுப் பற்கள் நாம் உண்ணும் உணவை கத்தி போல வெட்ட பயன்படும்.
கனின்ஸ்: இதற்கு கோரைப்பற்கள் என்று பெயர். இது மனிதன் உணவை கிழிக்கப் பயன்படுகிறது. இது மிகவும் கூர்மையாக இருக்கும் . மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் என மொத்தம் நான்கு கோரைப் பற்கள் இருக்கும்.
ப்ரீ மோலார்: இதற்கு முன் கடை பற்கள் என்று பெயர். இது கோரைப்பற்கள் இதற்கு அடுத்தபடியாக மேலும் கீழும் அமைந்திருக்கும். இந்த முன் கடை பற்கள், வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப்பற்கள் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும். இந்த முன் கடை பற்கள் தட்டையாக மற்றும் தடிமனாக அமைந்திருக்கும்.
மோலார்: இதற்கு கடை பற்கள் என்று பெயர். இது முன் கடை பற்களுக்கு அடுத்தபடியாக தாடையின் மேலும் கீழும் அமைந்திருக்கும். இந்த முன்கடை பற்கள் மற்றும் கடை பற்கள் இரண்டும் உணவை நன்றாக மென்று விழுங்க உதவி புரிகிறது.
இந்த நான்கு வகை பற்களும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. தற்போது நாம் உண்ணும் உணவு வகைகளால் பற்களில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒரு மனிதன் சிறிய வயதிலேயே பல் நோயால் பாதிக்கப்படுகிறான். பற்களில் ஏற்படும் சிதைவு காரணமாக ஒரு கட்டத்தில் அந்த பல்லையே பிடுங்க நேரிடுகிறது. எனவே பற்களை மிகுந்த கவனமுடன் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
பற்களில் ஏற்படக்கூடிய நோய்கள்:
1.பல் வலி
2.பல் சொத்தை
3. ஈறுகளில் வலி
4. ஈறுகளில் வீக்கம்
5.பல் கூச்சம்
6.வாய் துர்நாற்றம்
மேற்கண்ட இந்த ஆறு நோய்களையும் தாண்டி, வாய்ப்புற்று நோயும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சிறிதாக பல்வலி வரும்போதே நாம் அதற்குரிய காரணத்தை கண்டறிந்து தகுந்த முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பற்களில் சொத்தை ஆரம்பக்கட்டத்திலேயே கவனிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் இந்தப் பல் முழுவதுமாக சொத்தையாகி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தற்போது இந்த பல் நோய்களை கண்டறிந்து தகுந்த சிகிச்சைகள் அளிக்க சென்னையில் பல்வேறு பல் மருத்துவமனைகள் உள்ளன. வற்றுள் தகுந்த, முறையான சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் நாம் பற்களை பரிசோதித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
பற்களை பாதுகாப்பது எப்படி?
1. தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவு உறங்கச் செல்லும் முன்பு பற்களை சரியான முறையில் துலக்க வேண்டும்.
2. உணவு உண்ட பின்னர் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது.
3. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது நல்லது
4. பற்களை துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுக்காமல், நீண்ட நேரம் தேய்த்து கொண்டிருக்காமல் அளவோடு துலக்க வேண்டும்.
5. அதிக இனிப்பு பண்டங்களை உண்பதை கூடிய அளவு தவிர்த்தல் வேண்டும்.
6. அதிக குளிர்ந்த பானங்கள், குளிர்ந்த உணவுகள் உண்பதை தவிர்த்தலும் நல்லது.
7. குறிப்பிட்ட இடைவெளியில் தகுந்த பல் மருத்துவரிடம் பற்களை காட்டி ஆலோசனை பெறுவது சிறப்பு தரும்.
பல் சிகிச்சையின் முக்கியத்துவம்:
நாம் நமது பற்களை முறையாக பராமரிக்க, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. தற்போது சென்னையில் பல இடங்களில் பல் மருத்துவமனைகள் உள்ளன. அவற்றுள் நமக்கு தகுந்த, உரிய சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை கண்டறிந்து பற்களை பரிசோதனை செய்துகொள்வது பயன்தரும். பற்களில் ஏற்படக்கூடிய சிதைவுகளை முன்கூட்டியே தவிர்த்து நம் பற்களை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், பல் வலியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த பல் மருத்துவம் நமக்கு முக்கியம் ஆகும்.
மேலும் வாசிக்க : சென்னையில் பல் இம்பிளான்ட் மேற்கொள்ள ஆகும் செலவுகள்