உங்கள் உடம்பின் ஆரோக்கியத்தில் நீங்கள் தகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் உடம்பில் வலி , பாதிப்பு அறிகுறிகள் அல்லது காயத்துடன் மருத்துவரிடம் செல்லும் போது, உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை துல்லியமாக கண்டறிய சில டயாக்னாஸ்டிக் பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரை செய்வார். அந்த டயாக்னாஸ்டிக் பரிசோதனை மூலம் அவர் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை துல்லியமாக கணித்து, அதற்குரிய சிகிச்சைகளை வழங்குவார்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 13 பில்லியனுக்கும் அதிகமான கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஒரு மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது.
உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க, முறையான சிகிச்சை திட்டத்தை உருவாக்குவதற்கு முன், உங்கள் மருத்துவருக்கு சரியான நோயறிதலுக்கான தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்காகவே டயாக்னாஸ்டிக் பரிசோதனை அவசியமாகிறது.
தற்போது நடைமுறையில்
110 க்கும் மேற்பட்ட டயாக்னாஸ்டிக் பரிசோதனைகள் பயன்பாட்டில் உள்ளன. அவை நோயைக் கண்டறிவதற்கும் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சிகிச்சையை வழிநடத்துவதிலும் அதன் செயல்திறனை மதிப்பிடுவதிலும் டயாக்னாஸ்டிக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த டயாக்னாஸ்டிக் பரிசோதனை முறையில் பல் நவீன தொழில் நுட்ப வழிமுறைகள் தற்போது பின்பற்றப்படுகின்றன. இந்த பரிசோதனை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் இரத்த மாதிரி நோயாளியின் உடம்பில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் டயாக்னாஸ்டிக் பரிசோதனை நடைமுறைகளில் சிலவற்றை இங்கே காண்போம். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைகளைப் பொறுத்து, இந்த டயாக்னாஸ்டிக் பரிசோதனைகள் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எக்ஸ்-ரே:
ரேடியோகிராபி அல்லது எக்ஸ்ரே எலும்புகள் மற்றும் உறுப்புகளின் படங்களை உருவாக்க கதிர்வீச்சு மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது. எக்ஸ்ரே என்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட இமேஜிங் கருவியாகும். இது இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடைந்த எலும்புகள் மற்றும் மார்பில் ஏற்படக்கூடிய சளித் தொல்லைகளை துல்லியமாக கண்டறிய அதிகளவில் பயன்படுகின்றன.
எம்.ஆர்.ஐ:
கதிர்வீச்சின் பயன்பாடு இல்லாமல் உடலின் உள் கட்டமைப்புகளின் படங்களை உருவாக்கும் மிகவும் மேம்பட்ட செயல்முறையே எம். ஆர். ஐ ஆகும். இந்த முறையில் ஒரு சக்தி வாய்ந்த காந்தம் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி உடலுக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய விரிவான படங்களை உருவாக்க முடியும்.இந்த முறையும் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய பெரிதும் பயன்படுகிறது.
அல்ட்ராசவுண்ட்:
அல்ட்ராசவுண்ட் ஒலி உறுப்புகள், ஒரு மின்மாற்றி மற்றும் கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தி உள் உறுப்புகளின் படங்களை உருவாக்குகிறது. இது மகப்பேறியல் நிபுணர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான கருவியாக உள்ளது. ஆனால் அதை விட அதிகமான பயன்பாடுகள் இந்த அல்ட்ராசவுண்ட் முறையில் கிடைக்கப்பெறுகிறது. இது மற்ற நோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக வலிக்கான அல்ட்ராசவுண்ட் சிகிச்சைகள் அதிகளவில் நடைமுறையில் உள்ளன.
மேமோகிராபி:
மார்பகத்தின் அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிய பெண்களுக்கு ஸ்கிரீனிங் மற்றும் டயாக்னாஸ்டிக் கருவியாக மேமோகிராபி பயன்படுத்தப்படுகிறது. மேமோகிராபி டிஜிட்டல் மயமாக்கலுடன் செயல்படுத்தப்படுவதால், இதில் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு வெளிப்பாடு மிகக் குறைந்த அளவுகளாக குறைக்கப்படுகிறது.
ஸ்கேன்:
டயாக்னாஸ்டிக் பரிசோதனை முறையில் ஸ்கேன் என்பது சிறப்பான ஒரு நோய் கண்டறிதல் முறையாக செயல்படுகிறது. ஸ்கேன் செய்வதன் மூலம் நோயாளியின் உள் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள புண்கள், கட்டிகள் ஆகியவற்றை தெளிவாக படம்பிடித்துக் கொள்ள முடியும். இதனால் தகுந்த முறையில் மருத்துவர் உள் உறுப்பு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
இரத்தப் பரிசோதனை:
ஒரு நோயாளியின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய இரத்த மாதிரி பரிசோதனை பரவலாக பரிந்துரைக்கப்படும். இந்த சோதனை முறையில் நோயாளியின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அது பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறது. இரத்தத்தில் உள்ள மாறுபாடுகளை பொறுத்து உடம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியலாம். குறிப்பாக டயாபடீஸ், அதிக ரத்த அழுத்தம் ஆகியவைகளை இரத்த மாதிரி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர மேலும் பல வகையான டயானாஸ்டிக் பரிசோதனை தொழில்நுட்பங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்த டயானாஸ்டிக் பரிசோதனை முறைகளை பின்பற்றி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டறிந்து, முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால், உடலில் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இந்த டயானாஸ்டிக் பரிசோதனைகளை மேற்கொள்ள சென்னையில் நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய பல டயானாஸ்டிக் பரிசோதனை மையங்கள் உள்ளன.
இந்த டயானாஸ்டிக் பரிசோதனை மையங்கள் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்கின்றன.