பல் சிகிச்சைக்கு செல்லும்போது எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி நமக்குள் எழும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித பாதிப்பு இருக்கும். எனவே பாதிப்பின் அளவை பொருத்து செலவாகக் கூடிய தொகையும் மாறும்.
பல் மருத்துவர்கள் முறையான சோதனை செய்து உங்கள் பற்களை சுத்தம் செய்யும் போது நீங்கள் செலுத்த வேண்டிய கட்டண விகிதங்கள் பற்றி இங்கு காண்போம்.
பொதுவாக நாம் பல் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போது ஆகக்கூடிய செலவுகள் பரவலாக வேறுபடுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலைகள் கூட இறுதியானவை அல்ல. உங்கள் பல்லில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை பொருத்தே சிகிச்சைக்குரிய செலவுகளும் மாறுபடும்.
பல் மருத்துவரின் விருப்பத்திற்கு ஏற்ப பல் சிகிச்சை சேவைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படுவது இல்லை. மதிப்புமிக்க கவனிப்புக்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கட்டணம் செலுத்துவது பல்லில் ஏற்பட்டுள்ள நோயை கண்டறியும் நடைமுறைகளை மட்டும் உள்ளடக்காது. இது ஒரு வசதியான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சிகிச்சை சூழலை ஏற்படுத்துவதற்கான, ஆரோக்கியமான செலவை நோக்கி செல்கிறது.
வழக்கமான பல் பரிசோதனையில் நடப்பது என்ன?
முதலில் உங்கள் பல் மருத்துவர் உங்களுடைய மருத்துவ அறிக்கைகள் மற்றும் பல் சுகாதார வரலாற்றை மதிப்பாய்வு செய்வார். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் உங்களுக்கு இருந்தால் அது பற்றிய கேள்விகளை தற்போது மருத்துவரிடம் கேட்கலாம்.
பல் மருத்துவர் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை துல்லியமாக ஆராய சிறப்பு கருவிகளைப் பயன்படுத்துவார். .இதன் மூலம் உங்களுக்கு வேறு ஏதேனும் சிறப்புக் கருவிகள் அல்லது சிறப்பு கண்டறியும் முறைகள் தேவைப்படுகின்றன என்பதனை உறுதி செய்து கொள்ளலாம்.
உங்கள் ஈறுகளில் வீக்கத்தின் அறிகுறிகள் இருந்தால்., உங்களுக்கு ஈறுகளை சோதிக்கும் சோதனை முறைகள் பரிந்துரைக்கப்படலாம்.
உங்கள் பற்களின் உறுதித்தன்மையை தீர்மானிக்க பல் மருத்துவர் ஒரு உலோக கொக்கினைப் பயன்படுத்துவார்.
எக்ஸ்ரே அறிக்கைகள் பல் சிதைவு ஏற்பட்டிருப்பதை கண்டறிய உதவுகின்றன.
உங்கள் வாயில் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை அறிந்தவுடன், நீங்கள் பல் சுத்தம் செய்வதற்கு
பரிந்துரைக்கப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் பல் சுத்தம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டால், நன்றாக பயிற்சி பெற்ற பல் சுகாதார நிபுணர் உங்கள் பருக்களை சுத்தம் செய்து மென்மையான பாக்டீரியா, பிளேக் வைப்பு மற்றும் கடினமான டார்ட்டர் போன்றவற்றை நீக்குவார். இந்த செயல்முறைக்கு நுட்பமான அளவிடுதல் கருவிகள் மற்றும் மினியேச்சர் சக்தி கருவிகளின் பயன்பாடு தேவைப்படுகிறது. இறுதியாக, உங்கள் பற்களின் ஈறுகள் மெருகூட்டப்பட்டு சுத்தம் செய்து முடிக்கப்படுகின்றன.
பல் பரிசோதனை மற்றும் பல் சுத்தம் செய்தல்: செலவு மற்றும் பலன்.
ஒரு அடிப்படை பல் சுகாதார பரிசோதனை மற்றும் சுத்தம் செய்ய நீங்கள் பணம் செலுத்தும்போது உங்களுக்கு உண்மையில் என்ன பலன் கிடைக்கிறது?
ஆரோக்கியமான வாய்க்கு முறையான பல் பரிசோதனை மிகவும் முக்கியம். பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த பரிசோதனைகள் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு என்ன தேவை என்பதை முழுமையாக புரிந்துகொள்ள உதவுகின்றன. சரியான கவனிப்பு இல்லாததால் வாயில் துர்நாற்றம், வலி, பல் இழப்பு,.பல் கூச்சம் ஆகியன ஏற்படலாம். இதனால் நீங்கள் முழுமையாக புன்னகைக்கவும் தயங்கலாம்.
ஆரோக்கியமான புன்னகையை வெளிப்படுத்த முடியாததால் உங்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் பாதிக்கப்படலாம். பல் பரிசோதனைகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் புன்னகையை நீங்கள் புன்முறுவலோடு வெளிப்படுத்தலாம். எனவே அவர்கள் உங்களுக்காக செலவிடக் கூடியது சிறந்த முதலீடுகளில் ஒன்றாகவே கருத வேண்டும் . ஆரோக்கியமான பற்களைக் கொண்டிருப்பதை மதிப்புடன் ஒப்பிடும்போது பல் பரிசோதனைக்கான செலவு எதுவும் அனாவசியம் இல்லை.
நமது பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவு வகைகளை எளிதாக உண்ண முடியும். நமது பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் வாய்விட்டு சிரித்து பேச முடியும். எனவே அவற்றிற்காக நாம் செலவிடும் தொகைகளை குறித்து வருத்தப்படுவது கூடாது. இதற்காக சென்னையில் நிறைய பல் சிகிச்சை மருத்துவ மையங்கள் உள்ளன. அவற்றுள் சிறப்பான சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணரை கொண்ட மையத்தை அணுகி தகுந்த ஆலோசனைகளை பெற்று, நாம் முறையாக நமது பற்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறவேண்டியது முக்கியம். இதற்காக ஆகும் செலவுகளை கருத்தில் கொண்டு, பல் மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தள்ளிப் போட்டோலோ, அல்லது சிகிச்சை பெற தயங்கினாலோ அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழிக்கேற்ப, நாம் தயக்கமின்றி நமது சிரிப்பை வெளிப்படுத்தினால் தான் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். எனவே சென்னையில் உள்ள மிகச்சிறந்த பல் மருத்துவர்களை கண்டறிந்து நாம் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மேலும் வாசிக்க : பல் மருத்துவத்தின் முக்கியத்துவம்.