நம் முழு உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முறையான இரத்தப் பரிசோதனைகளை குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.
குறிப்பிட்ட இடைவெளியில் இரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், காலப்போக்கில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
இரத்த பரிசோதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டும்?
உங்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வருடத்திற்கு இரண்டு முறையாவது முழு இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
இரத்த பரிசோதனைகள் செய்ய நீங்கள் அறிவுறுத்தப்படும் காரணங்கள்:
நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் உடம்பில் சில அசாதாரண அறிகுறிகளை அனுபவித்து வரலாம். அதனால் உங்களுக்கு உடலில் சோர்வு, வலி, எடை அதிகரிப்பு, எடை குறிப்பு மற்றும் பல சிக்கல்கள் ஏற்படலாம். இந்த வகை அறிகுறிகள் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால்,
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல் கொழுப்பு போன்ற பல்வேறு இரத்தக் கூறுகளின் அளவை அறிந்து கொள்ளவும், ஆரோக்கியமற்ற பழக்கங்களைக் குறைக்கவும், உங்கள் உணவு அல்லது உடற்பயிற்சி திட்டத்தை மாற்றியமைக்கவும் இரத்த பரிசோதனை உங்களுக்கு உதவும்.
உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றியும் இரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளலாம்.
வழக்கமான இரத்த பரிசோதனைகள் எந்த ஒரு நோய்க்கும் காரணமாக இருக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவும். இதனால் அந்த நோயின் தீவிரத்தன்மை தடுக்கப்படும்.
இரத்த பரிசோதனைகளைப் பயன்படுத்தி உடம்பில் உள்ள பல இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய முடியும்.
எனவே வருடத்திற்கு இரண்டு முறை உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து நீங்கள் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவுகளை தெரிந்து கொண்டு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
இரத்த பரிசோதனையில் பொதுவாக செய்யப்படும் சோதனைகள் சிலவற்றை காண்போம்.
1. முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி)
2. இரத்தத்தில் வேதியியல் (அடிப்படை வளர்சிதை மாற்ற) நிலை
3. தைராய்டு நிலை
4. இரும்பு அல்லது பி வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் முறையான அளவுகளுக்கான சோதனைகள்
இவை தவிர நீங்கள் விரும்பினால் வேறு பல சோதனைகளும் இரத்தப் பரிசோதனை மூலம் செய்து கொள்ளலாம். இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள முறையான மருத்துவரின் பரிந்துரை அவசியம் ஆகும்.
சில இரத்த பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு முன் ஏன் உண்ணாவிரதம் தேவைப்படுகிறது?
நீங்கள் சாப்பிடும் மற்றும் குடிக்கும் ஒவ்வொன்றிலும் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உங்கள் இரத்தத்தில் தொடர்புடைய அளவுகளை தற்காலிகமாக அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.
எனவே இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கு சில மணி நேரம் முன்பிலிருந்து நீங்கள் உணவு உட்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படலாம். இதனால் இரத்த பரிசோதனை முடிவுகள், உட்கொள்ளும் உணவுகள் காரணமாக தற்காலிக மாற்றங்களை சந்திப்பதை தடுக்க முடியும். இதனால் உங்கள் சோதனை முடிவுகள் முடிந்தவரை துல்லியமாக இருக்கும்.
உண்ணாவிரதம் தேவைப்படும் சில பொதுவான இரத்தப் பரிசோதனைகள் பின்வருமாறு:
1.கொழுப்பு சோதனைகள்
2.இரத்த சர்க்கரை சோதனைகள்
3.கல்லீரல் செயல்பாடு சோதனைகள்
4.சிறுநீரக செயல்பாடு சோதனைகள்
5.அடிப்படை வளர்சிதை மாற்ற குறைபாடு சோதனைகள்
6.குளுக்கோஸ் சோதனைகள்.
இரத்த பரிசோதனை முடிவுகளைப் பெற எவ்வளவு நேரம் ஆகும்?
இரத்தப் பரிசோதனை முடிவுகள் கிடைக்க சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை கூட ஆகலாம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயின் பாதிப்பை பொறுத்து இந்த கால அளவு மாறுபடும். சில வகை நோய்களுக்குகாக மேற்கொள்ளப்படும் பரிசோதைக்குரிய இரத்தத்தின் மாதிரிகள் சில தொலைதூர ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும் நிலை உருவாகலாம் என்பதால் கால அளவில் மாறுபாடுகள் இருக்கும்.
சில பொதுவான இரத்தப் பரிசோதனைகளின் முடிவை பெற எவ்வளவு காலம் ஆகக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1.முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி): 24 மணி நேரம்
2.அடிப்படை வளர்சிதை மாற்ற குறைபாடு: 24 மணி நேரம்
3.முழுமையான வளர்சிதை மாற்ற குறைபாடு: 24–72 மணி நேரம்
4.லிப்பிட் பேனல்: 24 மணி நேரம்.
இது நீங்கள் பரிசோதனைக்கு செல்லும் குறிப்பிட்ட ஆய்வகத்தைப் பொறுத்தும், ஒரே நேரத்தில் எத்தனை சோதனைகளை மேற்கொள்கிறீர்கள் என்பதை பொருத்தும் மாறுபட வாய்ப்பு இருக்கிறது. செய்யலாம் என்பதைப் பொறுத்தது. நீங்கள் பல சோதனைகை ஒரே நேரத்தில் செய்ய வேண்டி இருந்தால், எல்லா சோதனைகளும் முடியும் வரை நீங்கள் முழுமையான முடிவுகளைப் பெற முடியாது.
இந்த இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள சென்னையில் பல ஆய்வுக்கூடத்துடன் கூடிய சிகிச்சை மையங்கள் உள்ளன.
மேலும் வாசிக்க : வெவ்வேறு வகையான டயாக்னாஸ்டிக் சேவைகள்.